கடைசியில்.. சூரியனை நம்பும் அமெரிக்கா..! அடிக்கும் வெயிலில் "கொரோனா காலி" ..!
குறைந்த வெப்பநிலையில் வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாகவும் அதே வேளையில் வெப்பம் அதிகமாக இருந்தால் வைரஸ் வலுவிழப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடைசியில் சூரியனை நம்பும் அமெரிக்கா..! அடிக்கும் வெயிலில் "கொரோனா காலி"..!
அதிகரிக்கும் வெப்பத்தால் கொரோனா வைரஸ் தாக்கம் வலுவிழக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனரகத்தின் செயல் தலைவர் வில்லியம் பிரையன் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பெரும் பாதிப்பது அடைந்து உள்ளது அமெரிக்கா. கொரோனா சமூக பரவல் காரணமாக நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை.நெருங்குகிறது. இதுவரை பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து வித்திட்டது. இது ஒரு பக்கம் இருக்க கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உள்ளது பல்வேறு நாடுகள்
இந்த நிலையில் தொழில்நுட்பத்துறை இயக்குனரகத்தின் செயல் தலைவர் வில்லியம் பிரையன் தெரிவிக்கும் போது,
குறைந்த வெப்பநிலையில் வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாகவும் அதே வேளையில் வெப்பம் அதிகமாக இருந்தால் வைரஸ் வலுவிழப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது நேரடி சூரிய ஒளியில் வைரஸ் விரைவாக அதனுடைய வீரியத்தை இழக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும் வெப்பம் அதிகமாக உள்ள சிங்கப்பூரில் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
வெளிச்சம் இல்லாத இடத்தில் ஸ்டீல் போன்ற பொருட்களின் மீது கொரோனா வைரஸ் படர்ந்து இருந்தால் அது குறைய 18 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது என்றும் ஆனால் வெப்பம் படும் இடத்தில் இருந்தால் 6 மணி நேரத்தில் அது வலுவிழந்து விடுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளதாக பிரையன் தெரிவித்துள்ளார். அதாவது சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய புற ஊதாக்கதிர்கள் கொரோனா வைரசை அழிக்கும் வல்லமை கொண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப் கோடைகாலத்தில் கொரோனாவின் தாக்கம் வலுவிழக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதை சற்று கவனமுடன் பரிசீலனை செய்யப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.