பொங்கல் கொண்டாட ஆன்லைனில் மாட்டு சாணம்...! அமேசான் அட்டகாசம் ....!!!

தமிழர் திருநாளாம்  பொங்கல் திருநாள்     வருவதற்கு இன்னும்  இரண்டு  நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில்  எங்கிருந்தாலும்  எந்த பொருள் வேண்டுமானாலும் டோர்ஸ்டெப் செய்கிறது  அமேசான்.

அதனால், பொங்கல்பண்டிகைக்காக  தற்போது மாட்டு  சாணம் கூட ,  ஆன்லைனில்  விற்பனை  செய்கிறது.

மாட்டு சாணத்தின் விலை :

100% cow dung  cake ( cow gobar ),  நூறு  சதவீதம் தூய்மையான  மாட்டு சாணம்   என்பது தான் இதன் பொருள் .  மேலும் இதனுடைய விலை 129  ரூபாய்  என   குறிப்பிட்டுள்ளது.மேலும் ,  விலை 129  ரூபாய்  என  குறிபிடப்பட்டுள்ள  மாட்டு  சாணத்திற்கு, தற்போது  ஆபர்  வழங்கி  1௦௦  ரூபாய்க்கு  விற்கிறது அமேசான் .

 

இதற்கு  மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு  கிடைத்துள்ளது.

இதெல்லாம்  தேவையா ?

இப்படியுமா .... இதெல்லாம் தேவைதானா  என்றால்..? ஆம்   தேவைதான்  என  தோன்றும்.

 நகர்ப்புறங்களில்  மாடுகளை  பார்ப்பது கொஞ்சம்  கஷ்டம் தான் .  அப்படியே  ஒரு வேலை பார்த்தாலும், சாணத்தை  நினைத்த  நேரத்தில் பெற முடியுமா ? ஒரு வேளை  சாணம் கிடைத்தாலும்  , பொங்கல்  நேரத்தில்   விழா  கொண்டாட தேவைப்படும் சாணத்தின்  அளவிற்கு  தான்  கிடைக்குமா..?...இப்படி பல கேள்விகள் எழும் .

 

 

 

இதன் காரணமாக தான்  என்னமோ ....அமேசான்  தற்போது மாட்டு  சாணத்தை  கூட ஆன்லைன் மூலமாகவே  விற்பனை  செய்கிறது. ......