தொலைபேசி ஒட்டுக்கேட்க 10 அமைப்புகளுக்கு அனுமதி..! மத்திய அரசு அதிரடி..! 

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக எந்த ஒரு கணினி தொடர்புடைய தகவல், தொலைபேசி தகவல்கள் சேமித்து வைத்தல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும், ஒட்டுக்கேட்கும் மத்திய மாநில அரசுகளுக்கு, 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் அதிகாரம் வழங்க உள்ளது.

தொலைபேசி ஒட்டு கேட்க சிபிஐ, அமலாக்கத் துறை, உளவுத்துறை உள்ளிட்ட 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து நேற்று உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மக்களவையில் தெரிவிக்கும்போது,

"மத்திய அரசின் சிபிஐ,என்ஐஏ, அமலாக்கத்துறை, உளவுத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குனரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி காவல்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இவ்வாறு தகவல் கண்காணிக்கவும் ஒட்டு கேட்கவும் முன்கூட்டியே ஒப்புதல் பெறுவது மிக முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி பெறுவது எப்படி என்றால், மத்திய அரசை பொறுத்தவரையில் மத்திய உள்துறை செயலாளரும் மாநில அரசுகளை பொறுத்த வரையில் அந்தந்த மாநில உள்துறை செயலாளரும் இதற்கான சிறப்பு அனுமதி அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் என மத்திய அரசு எப்போதும் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலும் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.