சென்னையில் மாரத்தான்....! கலந்துக்க ரிஜிஸ்டர் பண்ணுங்க .......!!!
சென்னை சூப்பர் ரன்னர்ஸ் என்ற அமைப்பு , மரங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் , வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் நடைபெற உள்ளது.
இதில் 5 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம் என்பது குறிபிடத்தக்கது. மேலும், பெண்கள் ஆண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே மாரத்தான் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.
நடைப்பெறும் இடம் :
சென்னை அடையாறில் உள்ள குமார ராணி மீனா முத்தையா கலைக் கல்லூரி மைதானத்தில் மாரத்தான் போட்டியை நடத்துகிறது.
மொத்த பரிசுத்தொகை :
மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000. இதில் சிறுவர்களுக்கு/ஆண்களுக்குத் தனியாகவும், சிறுமிகள் / பெண்களுக்குத் தனியாகவும் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ.1000. இந்த போட்டியில் பங்கெடுக்க www.marathonchennai.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிபிடத்தக்கது.
