காதலர்களே உஷார்...! நாளை மறந்துக்கூட இந்த பக்கம் போகாதீங்க...!

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாட  உள்ளனர்.ஒவ்வொரு வருடமும்  பிப்ரவரி  14 ஆம் தேதி காதலர் தினமாக  கொண்டாடப் படுவது வழக்கம்.

இந்த திந்தைர்காக காத்திருந்த காதலர்கள் நாளை பீச் சினிமா, பார்க் என பல இடங்களுக்கு செல்ல தற்போதே திட்டம் போட்டு உள்ளனர்

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் யாரும் வரக்கூடாது என்று லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம்  திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது

இது குறித்து அறிக்கையில்,

"மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது. பிராக்டிகல் மற்றும் கலைநிகழ்ச்சி மட்டுமே நடைபெறும். எனவே, மற்ற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது என  திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.
அதே போன்று  மாணவர்களை  நாளை  லக்னோ  பல்கலை கழகத்திற்கு அனுப்ப  வேண்டாம் என  பெற்றோர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளது.

காரணம் காதலர் தினத்தன்று தேவை இல்லாமல் எழுகின்ற  பிரச்சனைகளை தடுக்க  இந்த முடிவை எடுத்துள்ளது பல்கலைகழகம்.

எனவே,காதலர்கள் எங்கிருந்தாலும், "ஒரு  நாளில் தோன்றி ஒரே நாளில் அழிவது அல்ல காதல்...என்றென்றும் நிலைத்து இருப்பதே காதல்".... எனவே நாளை யாரும் உணர்ச்கிவசப்பட்டு தேவை இல்லாத  செயல்களில் ஈடுபடுவது வேண்டாம் என  பொதுமக்கள் கருதுகின்றனர்