பிரசவ அறையில் அஜித்..! புகைப்படத்துடன் பதிவிட்டு பிறந்த நாளை நினைவு கூர்ந்த நடிகர்..! 

நடிகர் அஜித்துக்கு  தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அஜித் என்றாலே  பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளியான திரௌபதி படத்தில் அஜித் மச்சான் ரிச்சர்ட் நடித்துள்ள நிலையில், மனைவி ஷாலினி தன்னுடைய   மகளுடன் சினிமாபார்க்க ரோகினி தியேட்டருக்கு சென்று இருந்தார்.

இந்த ஒரு நிலையில், அஜித் மகன் பிறந்த தினமான இன்று சில சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் நடிகர் ஒருவர். அதில்,

"குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு ஹீரோயினாக மாறியவர் ஷாலினி. அவரும், அஜீத்தும் 'அமர்க்களம்' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தபோது காதல் ஏற்பட்டது. இப்படத்தின் ஷட்டிங்கிற்கு நான் அடிக்கடி சென்று வந்தபோது, இந்த விஷயத்தை அறிந்துகொண்டேன். 1999ல் படம் ரிலீசானது. பிறகு திடீரென்று அஜீத், ஷாலினி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2000 ஏப்ரல் 24ம் தேதி, இருவீட்டார் சம்மதத்துடன் அஜீத், ஷாலினி காதல் திருமணம் சென்னையில் நடந்தது. 2008 ஜனவரி 3ல் அனொஷ்கா பிறந்தாள். இப்போது அந்த சிறுமிக்கு 12 வயது. 2015 மார்ச் 2ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அஜீத், ஷாலினி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு பிரசவமும் சிசேரியன் முறையில் நடந்தது. இரண்டு முறையும் டாக்டர்களின் விசேஷ அனுமதி பெற்று, பிரசவத்தின்போது அஜீத் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1) அஜீத், ஷாலினி ஜோடி சேர்ந்த முதல் படம், 'அமர்க்களம்'. (1999ல் ரிலீசானது)
 2) அஜீத், ஷாலினி காதல் திருமணம் நடந்த வருடம், 2000 ஏப்ரல் 24. 
3) அஜீத், ஷாலினி தம்பதியருக்கு மகள் அனொஷ்கா பிறந்த வருடம், 2008 ஜனவரி 3. 
4) அஜீத், ஷாலினி தம்பதியருக்கு மகன் (ஆத்விக்) பிறந்த வருடம், 2015 மார்ச் 2. 5) அஜீத் பிறந்தநாள், மே 1. 
6) ஷாலினி பிறந்தநாள், நவம்பர் 20.

என பதிவிட்டு உள்ளார். இவருடைய பதிவின் கீழ் அஜித் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.