தீராத ஏர்செல் பிரச்னை .. வாடிக்கையாளர்களுக்கு அடித்த இடி...

ஏர்செல் வாடிக்கையாளர்கள் தனகளது ஏர்செல் சேவை கிடைக்க பெற வில்லை என்று கடந்த ஒரு மாத காலமாகவே தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனால்,தமிழகத்தில் பல இடங்களில்ஏர்செல் சேவை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள்

பின்னர், இதற்கான காரணமாக தனியார் டவர் நிறுவனத்திடம் பேசப்பட்ட ஒப்பந்தம் படி,  பணத்தை செலுத்தாததால் டவர் முற்றிலும் முடக்கப்பட்டது.

அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 9 ஆயிரம் டவர்களில்,முதற்கட்டமாக 8500    தவர்களும், தற்போது முழுவதுமாக முடக்கபட்டு உள்ளது.

இதன் காரணமாக எந்த ஒரு கால்ஸ் அல்லது மெசேஜ் என எதனையும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு நெட்வொர்க் சேவைக்கு.....

இந்நிலையில், வேறு நெட்வொர்க் சேவைக்கு மாற முயன்றால்,அதனை மாற்ற  தேவையான போர்ட் எண் கிடைப்பதற்கும் தற்போது வழி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்

வங்கி,பாஸ் போர்ட், கேஸ்,பான் எண், ஆதார் எண் உள்ளிட்ட அனைத்திலும் ஏர்செல் எண் கொடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பின்னர். இது குறித்து கருத்து தெரிவித்த ஏர்செல் நிறுவன தென்மண்டல தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயனான்," இன்னும் ஓரிரு நாளில் போர்ட் எண் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்,.

இதனை நம்பி சற்று அமைதியாய இருந்த ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு இடி விழும் செய்தியாக,10  நாட்களாகியும் போர்ட் எண் கிடைக்காமல் பெரும்பாலோனோர்  அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஏர்செல் சேவை மையத்திற்கு சென்று போர்ட் எண் பெற சென்ற வாடிக்கையாளர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை...

இன்று போய் நாளை வா என்பதற்கு ஏற்ப,ஊழியர்கள் நாளை வருமாறு   வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.

சர்வர் கோளாறு என காரணம் காட்டிய பேசிய ஊழியர்களிடம்,வாக்கு வாதத்தில் ஈடுபட்ட  வாடிக்கையாளர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது,மக்கள் படும் இந்த துன்பத்திற்கு அரசு என்னதான் செய்கிறது...? வேறு சேவைக்கு மாறுவதற்கு போர்ட் எண் கிடைக்க வழிவகை செய்யும் அளவிற்காவது அரசு உதவாமல் என்ன செய்கிறது என்ன   தங்களுடைய வாதத்தை முன் வைத்தனர்.

இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால வரைமுறை கொடுக்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர் ....

எப்போதுதான் போர்ட் எண் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து, அவர்கள் வேறு சேவைக்கு மாற முடியும் என்பதில் சந்தேகம் தான் மேலோங்கி உள்ளது.