ஏர்செல் வாடிக்கையாளர்களே..! டவர் கிடைக்க இதை உடனே பண்ணுங்க..

ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு தற்போது டவர் கிடைக்காததால்,பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் .

ஜியோ வருகைக்கு பின், தொழில் ரீதியாக போட்டி போட முடியாமல்  நஷ்டத்தை சந்தித்த ஏர்செல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆறு மாநிலத்தில்  தனது சேவையை  நிறுத்தியது.

தற்போது தமிழகத்தில் டவர் கிடைக்கவில்லை என்ற பிரச்சனை எழுந்துள்ளது.

2 ஆவது நாளாக முடங்கிய ஏர்செல் சேவை

தமிழகத்தில் மொத்தம்  9000  ஏர்செல் டவர்களில் 6500  டவர்களின் சேவை முற்றிலும் முடங்கியது.காரணம் ஒப்பந்தம் படி,தனியார்  டவர் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவில்லை.இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பின்,ஏர்செல் சேவை பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்  

இந்நிலையில்,2G ஏர்டெல் சேவையை பெறுவதற்கு,உங்களுடைய செல்போனில்,நெட்வொர்க் செட்டிங் அல்லது ஆபரேட்டர் செலகஷன் பகுதிக்கு போய் , அதில்  மேனுயல்(manual) சர்ச் கொடுத்து,  அதில் ஏர்டெல் நெட்வொர்க்கைத் தேர்வு செய்யவும். இதன் மூலம் ஏர்டெல் நெட்வொர்க் வழியாக உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்குக்கு மாற்றலாம் என அறிவித்துள்ளனர்.

இவ்வாறு  ஏர்டெல் சேவையை பெறுவதற்கு ஒரு நாள் எடுத்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில்,ஏர்செல் இழப்பு மூலம் வாடிக்கையாளர்கள் மற்ற சேவைக்கு  மாறுவதால்,ஏர்டெல்,வோடபோன் உள்ளிட்ட  மற்ற நிறுங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர் .

தமிழகத்தில் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்த ஏர்செல், இந்த இரண்டு நாட்களில் மட்டும்  25  லட்சம் வாடிக்கையாளர்களை  இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும்,ஏர்செல் ஊழியர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது