ஊருக்கு போகணுமா? மே 3 ஆம் தேதி முதல்... இப்போதே முன்பதிவு செய்யுங்கள்..! ஏர் இந்தியா அதிரடி!

மே 4 தேதி முதல் உள்நாட்டு சேவையும், வரும் ஜூன் 1 ஆம்  தேதி முதல் வெளிநாட்டு சேவையும்  தொடங்கும் என ஏர்  இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.இதற்கான முன்பதிவு இப்போதே தொடங்க உள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளதால் பொதுமக்களுக்கு இது ஓர் ஆறுதல்  தரும்  செய்தியாக அமைந்து விட்டது 

கொரோனா பரவுவதால் ரத்து செய்யப்பட்டுள்ள விமான சேவைகள் மே 4 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதாவது 40 நாள் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில தொழில் நிறுவனங்கள் செயல்பட வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த ஒரு நிலையில் மே 4 உடன் 40 நாட்கள் ஊரடங்கு முடிவுற்ற பின், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் மே 4ம் தேதி முதல் உள்ளாட்டு சேவையும், ஜூன் 1 முதல் வெளிநாட்டு சேவையும் தொடங்கும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது தற்போதைக்கு ஒருவிதமான நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தொழிலதிபர்களும்,நெருங்கிய உறவினர்களை கூட பார்க்க முடியாத மக்களும்  எப்போதுதான், தான் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியுமோ ? எப்போது தான் சேவை தொடங்குமோ  என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த ஒரு நிலையில் மே 4 ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட  நகரங்களுக்கான பயண சேவை தொடங்க ஏதுவாக ஏர் இந்தியா முன்பதிவு இப்போதே தொடங்குகிறது என ஏர்  இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.