air india survey

ஏர் இந்தியா விமானம் சில நாட்களுக்கு முன் ஒரு நன்னடத்தை சர்வே நடத்தி உள்ளது. அதன் படி, விமானத்தில் பயணம் செய்யும் போது, மது எடுத்துக் கொள்வது பலரின் விருப்பமாகவே உள்ளது .அதன் படி விமானத்திலேயே மது வழங்கப்படுகிறது .

ஆனால் இந்த மதுவை குடித்துவிட்டு, பறக்கும் விமானத்தில் பயணிகள் சிலர் செய்யும் குறும்பு இருக்கே சொல்லி மாளாது என இதர பயணிகள் வருத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .

அதன்படி பறக்கும் விமானத்தில் குடிமகன்கள், தன் அருகில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே தொந்தரவு செய்வதாக 69 சதவீத ஏர் இந்தியா பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குடிமகன்களை கண்டித்தாலும் அவர்கள் தொடர்ந்து, பயணம் முழுக்க தொந்தரவு செய்வதாக பெரும்பாலான பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .

இதற்காக பயணிகளின் விருப்பத்திற்கு, ஏற்ப தனி கேபின் அமைக்க ஏர் இந்தியா நிறுவனத்திடம் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதற்காக கூடுதலாக விமான கட்டணத்தை செலுத்தவும் பயணிகள் தயாராக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர் .