பாமர மக்களும் எளிதில் பயனடையும் வகையில் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் ஏசியா ரூ 899-க்கு பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்பாேது வழங்கப்படும் இந்த சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்யலாம். இந்த சலுகையை பெற நவம்பர் 6 வரை காலவகாசம் தரப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 6-ம் தேதி வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது ஏர் ஏசியா நிறுவனம்.
ரூ.899 க்கு இம்பால் முதல் கவுகாத்தி வரை பயணம் செய்யலாம். கொச்சி - பெங்களூரு வரை பயணம் செய்ய ஆரம்ப கட்டணம் ரூ.999. பெங்களூர் - கோவா ரூ1,199, கோவா- டெல்லி செல்ல ரூ3,199, டெல்லி - பெங்களூர் ரூ2699, கட்டணமாக அறிவித்துள்ளது.
