மீண்டும் வருகிறது புயல்….!!!

இன்று காலை 'நடா' புயல் காரைக்கால் - கடலூர் இடையே கரையை கடந்ததைத் தொடர்ந்து, வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தற்போது, காரைக்காலுக்கு 20 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், குறிப்பாக கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.