Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மீண்டும் புது புயல்.......!!! “ மழை வருமா.....?

கடந்த வாரத்தில் உருவான “ நடா புயல் “ வருடா புயல், கரையை கடந்து சென்றது. இந்த இரண்டு புயலும் , எதிர்பார்த்த அளவுக்கு மழை கொடுக்காததால் , தற்போது உருவாக உள்ள புதிய புயலால் , மழை வருமா என அதிர்பார்பு கிளம்பி உள்ளது.

அதாவது, நடா மற்று வருடா புயலால், பெருத்த மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். ஆனால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி அளித்துள்ளார். விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 1180 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.