கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் இப்படி ஒரு பிரச்சனை உண்டு! தெரியுமா உங்களுக்கு?

உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று ஏற்பட்டு அதனால் மக்கள் படும்பாட்டை தினந்தோறும் பார்க்க முடிகிறது. 

இந்த ஒரு நிலையில் பிரபல மருத்துவ நிபுணர்களான ஸ்வப்னீல் பரிக், மகேரா தேசாய், ராஜேஷ் எம்.பரிக் ஆகிய மூவரும் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டவர்களை ஆய்வு  நடத்தியதில் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர்

அதில் 

ஒரு முறை நோய் தொற்று எற்பட்டு அதன் அறிகுறிகள் வெளிப்பட 1- 14 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு சிலருக்கு  4 முதல் 5 நாட்களில் அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது 

உதாரணத்திற்கு ஒருவர் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டாலோ அல்லது விமானத்தில் பயணம் செய்தாலோ,பாதிக்கப்பட்டவரிடமிருந்து முதலில் வைரஸ் பற்றிக்கொள்ளும். ஆனால் அதன் அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும் அவரிடமிருந்து மற்ற அனைவருக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் 

கொரோனா தோற்று எற்பட்ட உடன், அறிகுறிகள் தெரிவதற்கு முன் அவர் யாரிடம் தொடர்பில் இருந்தார், அவருடன் நேரில் பார்த்து பேசி பழகியவர்கள் யார் என்பதனை சரியாக அடையாளம் காண வேண்டும்.  இவர்கள் மூலம் பலருக்கும் பரவ வாய்ப்பு உள்ளது 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து  இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் மற்றவருக்கு  எளிதாக பரவும்  

கொரோனா பாதிப்பிலிருந்து சிகிச்சை முடிந்து மீண்டு வந்தவர்களிடமிருந்து கூட, அவர்களிடமிருந்து  மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு  உள்ளது. எனவே அவர்களும் குறைந்தபட்சம் 14 நாட்கள்  தனிமையில் இருப்பது நல்லது 

ஏன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டால் எந்த அறிகுறியும்  இல்லாமல் மற்றவர்களுக்கு எளிதாக நோய் பரவுகிறது. ஆரோக்கியமாக தானே  இருக்கிறோம் என  அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி வரும் தருணத்தில் நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவி விடுகிறது. எனவே தனிமைப்படுத்திக்கொள்வது சிறந்தது 

ஏழ்மை நிறைந்த நாடுகளில் கொரோனாவை எதிர்கொள்வது என்பது பெரும் சவாலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.