தமிழகத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

அதன்பின், தமிழகம் முழுவதிலும் இருந்த பெரும்பாலான கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனையும் மீறி பயன்படுத்தி வந்த சில நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் தெரிந்தும் தெரியாமலும் ஒரு சில சிறிய கடைகளில் கூட தற்போது அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் காணப்படுகிறது. அதனையும் அதிகாரிகள் திடீர் சோதனை செய்து அவர்களிடமிருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் தடைக்கு பிறகு மிகவும் அதிரடியாக செயல்பட்டு வருவதால் மக்களும் பிளாஸ்டிக் தடைக்கு பெரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு கடைகளிலும் அங்காடியிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போகும் சூழல் நிலவி வருகிறது.அதே சமயத்தில் இதுநாள் வரை பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக உள்ள துணிப்பை, பாக்குமட்டை, வாழை இலை உள்ளிட்டவற்றுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

தாமரை இலை, வாழை இலை போன்றவை பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இதனால் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுநாள்வரை கண்டுகொள்ளாமலும், பெருமளவிற்கு லாபம் இல்லாமலும் இருந்த ஒரு விஷயம் தற்போது மக்கள் மத்தியில் ஒரு டிமாண்டை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சுய வேலைவாய்ப்பு செய்ய விரும்பும் நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக என்னென்ன பொருட்கள் தயார்படுத்த முடியுமோ, அந்தப் பொருட்களை தேர்வு செய்து தயார் செய்கின்றனர்.

உதாரணம் :  நூலினால் தயாரிக்கப்பட்ட கைப்பை

இதேபோன்று அட்டைப்பெட்டிகள், பேப்பர் பாக்ஸ், பாகஸ் போன்ற பொருட்களின்  விறபனையும் சூடு பிடித்துள்ளது.