வரும் 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை இருக்காது – ஆய்வில் அதிரடி...!!!
கடந்த சில நாட்களாக , தமிழகத்தில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்வதால், வருகிற நவ.6ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே, தற்போது 250 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து விலகி செல்லும் வேளையில், வருகிற 6ஆம் தேதிக்கு மேல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
