திருமணம் முடிந்த நடிகை பாவனா போதை மருந்து வியாபாரியா...?

நடிகை பாவனா தமிழ் தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளில் மிகவும் பிசியாக நடித்து வந்தவர்.இவர் சென்ற ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான நவீன் என்பவரை கரம் பிடித்தார்

இதற்கு முன்னதாக, பாலியல் வன்முறைக்கு ஆளான நடிகை பாவனா  குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இதில்  சம்மந்தப்பட்டதாக குற்றவாளியாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி, நல்ல முறையில் திருமணம் நடைப்பெற்று குடும்ப வாழ்வில் இறங்கி உள்ள பாவனா தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் வர உள்ளார்

இவர் கன்னடத்தில் நடித்து வரும் 'இன்ஸ்பெக்டர் விக்ரம்' என்ற படத்தில் பிரஜ்வால் தேவராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். 

இந்த படத்தில் முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தும் துணிச்சலான  பெண்ணாக நடிக்கிறார் பாவனா

இந்த படத்தை தொடர்ந்து பாவனா 'மஞ்சினா ஹனி' என்கிற கன்னட படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது