ADVISED TO WEAR cotton dress in summer

கோடை தொடங்கியது....காட்டன் டிரஸ் உடுத்த தயாராகுங்கள் ......

காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். மனதளவில் அல்ல உடலளவிலும் கூட . ஆம் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது . வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெயில் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பல வழிமுறைகள் இருந்தாலும், நாம் உடுத்தும் உடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .அதன்படி காட்டன் உடைகளை தேர்வு செய்யலாம் .

காட்டன் உடையின் மகத்துவம் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .

வியர்வையை உறிஞ்சும்

உடல் நலத்திற்கு மிக நல்லது

காற்றோட்டமாக இருக்கும்

நம் உடலில் அணிந்திருப்பதே தெரியாத அளவிற்கு லேசாக இருக்கும்

பார்ப்பதற்கு ரிச் லுக்

இது போன்ற பல காரணங்களால் காட்டன் ஆடைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் கூட கோடைக்காலத்திற்கு ஏற்றது என்றாலே காட்டன் ஆடைகள் மட்டுமே .

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் காட்டன் ஆடைகள் பல மாடல்களில் கிடைக்கின்றது