கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு கடைகளில் ஒரு ஆதிவாசி மனிதர் அரிசி திருடி வந்துள்ளார்.அந்த  நபர் யார் என்பதை கண்டுப்பிடிக்க15 பேர் கொண்ட கும்பல் ஒன்று காட்டிற்குள் சென்றது.

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் இரவு நேரங்களில் கடைகளில் புகுந்து ஆதிவாசி இளைஞர் மது என்பவர்,பல நாட்களாக இந்த திருட்டு தொழிலை செய்து வந்துள்ளார்

இதனை தொடர்ந்து மதுவை பிடிக்க,15 பேர் கொண்ட ஒரு கும்பல்,எப்படியோ மதுவை கண்டுப்பிடித்து, அடித்து துவைத்து எடுத்துள்ளனர்

அதிலும் குறிப்பாக,மதுவை கட்டிப்போட்டு அடித்து,அவருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில்,பதிவிட்டு உள்ளனர்.

ஆனால் அடி உதைக்கு ஆளான மதுவை பொலிசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.பின்னர் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது, இறந்துள்ளார்.     

இது தெரியாமல் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சோதித்த போது,மது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த அந்த  நபர்களுக்கு,பொதுமக்கள் கடும் கண்டனத்தை  தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.