கிடைத்தது அழைப்பிதழ்..! 1977 இல் அச்சிடப்பட்ட பொக்கிஷம்... இப்போது படு வைரல்..! 

"old is gold" என்பதற்கு ஏற்ப... எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதுவும் பழமைக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

அன்றைய கால கட்டத்தில் நம் முன்னோர்கள் மேற்கொண்ட உணவு முறைகள் முதல் பழக்க வழக்கங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரு சில விஷயங்களை கடைபிடித்து வருகிறார்கள். ஒரு சில பொருட்களை வாழந்ததற்கான அடையாளமாய் வழி வழியாய் வைத்திருப்பார்கள் இதையெல்லாம் பார்க்கும் போது மனதிற்குள் ஒரு விதமானமகிழ்ச்சி ஏற்படும் அல்லவா..? அதே போன்று தான். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில சுப துக்க நிகழ்வுகள் உயிர் வாழும் வரை மறக்க முடியாது.

குறிப்பாக ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருமண நிகழ்வு முதல் அப்போது அச்சிடப்பட்ட அழைப்பிதழ் என அனைத்தும் பிற்காலத்தில் மறக்க முடியாத நினைவாகவும். விலை மதிப்பற்ற பொக்கிஷமாக நமக்கு தோன்றும்.


 
இப்படியான நிலையில் தற்போது கிடைத்துள்ள ஒரு அழைப்பிதழ் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. அதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது ஆதி பராசாக்தி ஆலயம் அழைப்பிதழ் 

இதில் 

வணக்கம். நாளது 25.11.77 வெள்ளிக்கிழமை விடியற்காலை 3 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ஆணைப்படி மூலவரை கருவறையில் அமர்த்த இருக்கிறது. ஆகவே அன்பர்கள் அனைவரும் வருகை தந்து அம்மன் திருவருளைப் பெற வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.