பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது.

இந்நிலையில்,வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் உடனான ஆதார் எண் இணைப்பு  என்பது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.இதற்கு மக்களிடேயேஎதிர்ப்பு கிளம்பியதால்,இது வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

எனவே,உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் உடன் ஆதார் எண் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை நேற்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதற்கு முன்னதாக மார்ச் 31 ஆம்  தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில்,கால  அவகாசத்தை நீட்டித்து உள்ளது மத்திய அரசு..

ஆனாலும் அதே வேளையில்,வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் தட்கல் பாஸ்போர்ட் பெறுவது ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆதார் எண் இல்லாதவர்கள் ஆதார் அட்டை பெற விண்ணப்பித்திருந்தால், அதற்கான விண்ணப்ப எண்ணை,பயன்படுத்தி அவசர தேவைக்கு பயன்படுத்திகொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.