நள்ளிரவு..! இருள்  சூழ்ந்த நேரம்..!  தெருக்கடையில் தன்னந்தனியாக நின்ற  நடிகை த்ரிஷா..! 

யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக தற்போது செயல்பட்டு வரும் நடிகை திரிஷா கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகள் உரிமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்

இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரிஷா குழந்தைகளின் உரிமையை ஆதரிப்போம், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டும்.. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். திரைப்படங்களை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதில் வருவதைப் போன்று செயல்படுவது மிகவும் தவறு... அதை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்.

பின்னர் ஈஷா யோகா ஜக்கி வாசுதேவ் அவர்களையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவரை பற்றிய ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆடம்பரமான வாழ்க்கை நடிப்பு எப்போதும் நட்சத்திர ஓட்டல் கலை விழா என பிஸியாக வலம் வந்துக்கொண்டிருந்த திரிஷா திடீரென ஓர் தெரு கடையில் உள்ள ஓர் சிறிய கடையில் அதாவது சிறிய உணவகத்தில் நின்று கொண்டு உள்ளவாறு ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நடிகை திரிஷா பயணம் மேற்கொண்டிருந்த போது இரவு நேரத்தில் அவ்வழியில் இருந்த உணவகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவருக்கு பிடித்த தோசையோ அல்லது இட்லியையோ வாங்குவது போன்று இந்த புகைப்படம் விளக்குகிறது. இவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மிக சாதாரணமாக ஒரு சிறிய கடையில் உணவருந்த திரிஷா அந்த கடையின் வெளியே காத்திருக்கும் அந்த காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது