பட்டு புடவையில் ரம்யா பாண்டியன் எடுத்த ஒரு போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதை அடுத்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன். 

"நான் நடித்த 2 படங்களும் ஒரு வித்தியாசமான கதை களம் கொண்டது தான். அப்போதே வெகுவாக ரசிகர்களால் கவரப்பட்டேன். மாடல் உடையில் இருப்பதற்காக மாடர்ன் உடை அணிந்து சில போட்டோஷூட் எடுத்திருக்கிறேன். அதிலிருந்து வேறுவிதமாக மாற்றி கொள்ள மீண்டும் புடவைக்கு மாறினேன். புடவை அணிந்து நான் எடுத்த முதல் போட்டோ ஷூட் இதுதான்.. புடவைக்கு என்றுமே மவுசு தான் என்பதை இந்த போட்டோ ஷூட் மூலம் நான் புரிந்து கொண்டேன்..

பிரியங்கா சோப்ராவின் பெர்சனாலிட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.சமீபத்தில் சினிமா பார்ப்பது புத்தகங்கள் படிப்பது தான் எனது முக்கிய பொழுது போக்காக வைத்துள்ளேன். பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களது வாழ்க்கை வரலாற்றை படித்து வருகிறேன். ஹாலிவுட் இயக்குனர் சிட்னி லூமட் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவா தொடர்ந்து தற்போது சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு என தொடர்ந்து படித்து வருகிறேன்.இதுதான் எனக்கு தற்போதைக்கு பொழுதுபோக்கு என தெரிவித்துள்ளார்.