Losliya hot: லாஸ்லியா கிளாமர் லுக்கில் தற்போது, வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட்  ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் 3 நிகச்சியின் மூலமாக பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடனான காதல் பரபரப்பான பேசுபொருளாக மாறியது. பின்னர்,அவருக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். 

இதை தொடர்ந்து, தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய லாஸ்லியா உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.

இதுதவிர பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என லாஸ்லியாவுக்கு அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.குறிப்பாக இதில் பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார்.

இவர் நடத்தும் போட்டோஷூட்டிற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.அந்த போட்டோவில் நடிகை லாஸ்லியா தன்னுடைய பின்னழகை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளதால், அதற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன. 
\

View post on Instagram