சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷிகா, இந்த காலகட்டத்தில் தேசத்திற்கு சேவை செய்வதில் பெருமைப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

தான் படித்த நர்ஸ் வேலைக்கே சென்ற "பிரபல நடிகை"..! தொடர்ந்து குவியுது பாராட்டு ..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்க பிரபல நடிகையான ஷிகா மல்ஹோத்ரா மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக தன்னார்வத்தொண்டு செய்யத் தொடங்கினார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷிகா, இந்த காலகட்டத்தில் தேசத்திற்கு சேவை செய்வதில் பெருமைப்படுவதாக தெரிவித்து உள்ளார்.இவர் டெல்லியின் வர்தமன் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்சிங்கில் பட்டம் பெற்றதாக அவர் தெரிவித்து உள்ளார் 

View post on Instagram

மேலும் "நீங்கள் அனைவரும் எனது முயற்சியினை எப்போதும் பாராட்டியுள்ளதால், இந்த நேரத்தில் நம் நாட்டிற்கு சேவை ஆற்ற விருப்பம் தெரிவிக்கிறேன். எனவே இந்த நேரத்தில் உங்களது ஆதரவு தேவை என கேட்டுக்கொண்டு உள்ளார் 

மேலும், "மும்பையில் உள்ள மருத்துவமனையில் covid19 நெருக்கடியை எதிர்த்து போராட உள்ளேன். நீங்கள் அனைவரும் தயவு செய்து வீட்டில் இருங்கள் என கேட்டுக்கொண்டு உள்ளார் நடிகை. இவர் இதற்கு முன்னதாக நடிகர் சஞ்சய் மிஸ்ரா உள்ளிட் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

View post on Instagram

ஒரு செவிலியராக 40 ஆண்டுகள் சேவைக்கு மோடி பாரட்டு..!

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடிமும்பையின் சிவிக் ரன் "நாயுடு மருத்துவமனையிலிருந்து ஒரு செவிலியரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருந்தார். "உங்களைப் போலவே, லட்சக்கணக்கான செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தற்போது நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். நான் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். உங்கள் அனுபவங்களைக் கேட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என தனது பாராட்டை தெரிவித்து இருந்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நிலையில், நடிகையான இவர், கொரோனாவிற்கு எதிராக போராடும் இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நடிப்பை விட்டு தான் படித்த செவிலியர் பணிக்கே திரும்பியுள்ளது பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது