ஆகஸ்ட் 24 ஆம் தேதி அன்று நடிகர் சாந்தனு அவருடைய பிறந்தநாளை தன் பெற்றோர் மற்றும் மனைவி கீர்த்தியுடன் கொண்டாடி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒரு உருக்கமான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார் சாந்தனு.

அதில், "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" ஒவ்வொரு நாளுமே மிகவும் கஷ்டமான நேரமாகத் தான் கடந்து வந்திருக்கிறேன்... நீண்ட காலமாக வாழ்க்கையில் எனக்கு போராட்டம் மட்டுமே அதிகமாக உள்ளது. இன்று எனக்கு பிறந்தநாள்... இந்த பிறந்த நாளிலிருந்து நேர்மறையான திசைக்கு நான் செல்ல முடியும் என நம்பிக்கை வைத்திருக்கிறேன். தொடர்ந்து என்னை வாழ்த்துங்கள்... வழிநடத்துங்கள்... உங்களுக்கு என்னால் கொடுக்க முடிந்தது என் அன்பை தவிர வேறு ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் கருத்து தெரிவித்து உள்ளனர். 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக லவ் சிம்பல் மீது கிளிக் செய்து உள்ளனர். சுமார் 400 நபர்கள் ரீட்வீட் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு நடிகர் சாந்தனுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.