கடந்த 2 ஆண்டுகளில் .. நடிகர் சேதுவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயம்..! 

பிரபல நடிகரும் தோல் மருத்துவருமான சேது நேற்றைய முன் தினம் இரவு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 36 வயதே ஆகும் இவர் இளம் வயதிலேயே மரணமடைந்தது திரையுலகினரை மட்டும் இன்றி இவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவருக்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் நண்பர்களாக இருந்த போதிலும், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகர் சேது பற்றி மேலும் பல சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. தோல் நிபுணரான இவர், எத்தனையோ பேருக்கு சிகிச்சை அளித்து அதன் மூலம் பிரபலம் அடைந்தவர். சிகிச்சை என்றால் சாதாரண சிகிச்சை அல்ல.... காஸ்மெட்டாலாஜிஸ்ட். இவர் படிக்கும் போதே.. எதிர் காலம் குறித்த  மிக அழகான கனவுகளோடு வாழந்தவர். அதனால் தான் மக்கள் பொதுவாகவே தம்மை அழகாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர் என்பதனை புரிந்துகொண்டு தோல் மருத்துவத்திலும் அழகு குறித்த அனைத்து விதமான படிப்புகளிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதற்காகவே ஆஸ்திரேலியா லண்டன், அமெரிக்கா என பல நாடுகளுக்கு சென்று, அவருடைய துறையில் அட்வான்ஸ்டு லெவல் படிப்பு குறித்தும்....புதியபடிப்புகள் குறித்தும் ஆராய்ந்து வந்துள்ளார். அதன் விளைவாக தான்....சமீபத்தில் தான் தொடங்கிய புதிய மருத்துவமனை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவே சென்னை இ.சி.ஆரில் ஒரு கிளையும், ஆழ்வார்பேட்டையில் ஒரு கிளையும், அண்ணா நகரில் ஒரு மருத்துவ கிளையும் சமீபத்தில் தொடங்கி உள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளில் அவருடைய வளர்ச்சி மிக அதிகமாக இருந்துள்ளது.

சமீபத்தில் தான் அவருக்கு பிடித்த ஒரு புதிய காரும்,ஒரு வீடும் வாங்கி உள்ளார். இதற்கு நண்பர்கள் அனைவரையும் வரவைத்தும் உள்ளார். இப்படி பல கனவோடு வாழ்ந்த சேது.... இன்று இந்த உலகத்தில் இல்லை ... இது தான் வாழ்க்கையா..? வாழ்க்கை ஒரு சிறு வட்டம் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.