நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் கைலாசாவில் செட்டிலாக பிரபல நடிகர் விருப்பம்..! ஓகே சொல்வரா நித்யானந்தா..!

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் நித்யானந்தா கைலாஸாவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும் அவ்வப்போது நேரலையில் தனது சீடர்களுக்கு அறிவுரை வழங்கியும் வருகிறார். என்னதான் குற்றச்சாட்டு நித்தியானந்தா மீது சுமத்தினாலும் சீடர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறார்கள்.இந்த ஒரு நிலையில் அவர் குறித்த மீம்ஸ் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் கூட "எனக்கு இருக்கவே இருக்கிறது.. "கைலாச நாடு" என தெரிவித்திருந்தார். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நித்தியானந்தாவும், கடவுளை ஏற்றுக் கொள்பவராக இருந்தால் மட்டுமே அனுமதி உண்டு என தெரிவித்து இருந்தது நாம் அறிந்ததே.

இந்த ஒரு நிலையில் பிக்பாஸ் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண் ஓர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நீங்கள் கைலாசத்துக்கு சென்றால் யாருடன் செல்வீர்கள் என கேட்ட கேள்விக்கு, இப்போது எனக்கு மிகவும் பிடித்த நபர் ராஷ்மிகா மந்தனா.. அவருடன் தான் கைலாசத்துக்கு செல்வேன்; கைலாசத்தில் செட்டில் ஆவேன் என தெரிவித்துள்ளார்.