மாமனார் ரஜினி படம் டல்! செம்ம ஹேப்பியாய் பட்டாஸ் கொளுத்தும் தனுஷ்: பத்தவெச்சாச்சு!

*    சோஷியல் மீடியாக்கள் பிகில் படத்தை கழுவி ஊற்றின. இதனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் லேசாக டல்லடித்த அதன் வருமானம், அதன் பின் டேக் ஆப் ஆகி பிய்ச்சு உதறியது. 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் பிகில்தான் முதலிடம் பெற்றது. இப்போது தர்பார் படத்திற்கும் இப்படித்தான் நெகடீவ் விமர்சனங்கள் வந்து விழுகின்றன. இந்நிலையில் பிகில் போல் இப்படமும் வசூல் ஹிட்டடிக்கும் என ரஜினி டீம் நம்புகிறது. 

*    விஜய்சேதுபதி, த்ரிஷாவுக்கு பெரும் பிரேக் கொடுத்த ‘96’ படம், தெலுங்கில் ‘ஜானு’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இங்கு இயக்கிய அதே பிரேம் குமாரே அங்கும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப்படம் பற்றி பேசியிருக்கும் சமந்தா...’96 படத்துடன் ஜானுவை ஒப்பிடாதீர்கள். இது ஒப்பீட்டுக்காக எடுக்கப்பட்ட படமில்லை. இன்னும் அதிகமான மக்கள் இந்த கதையை உணரவேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

*    ஜெயித்தே ஆக வேண்டிய வெறியிலிருக்கும் சூர்யா, தனது சொந்த தயாரிப்பில் ‘சூரரைப் போற்று’ படத்தினை எடுத்துள்ளார். இறுதிச்சுற்று இயக்குநர் சுதா இயக்கியுள்ள படமிது. இப்படத்துக்காக பணத்தை அள்ளிக் கொட்டியுள்ளார் சூர்யா. ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து பட ஷூட்டை நடத்தியுள்ளனர். அதன் ஒரு நாள் வாடமை நாற்பத்து ஏழு லட்சமாம். 

*    தல அஜித்துக்கு தாறுமாறான ரசிகர் கூட்டம் இருப்பது உண்மையென்றாலும், அவரை வம்புக்கு இழுக்கவும் ஒரு பெரும் கூட்டம் இருப்பது உண்மை. அந்த வகையில் அஜித் பல வருடங்களாக பேட்டியே கொடுக்காமல் இருப்பதை ஒரு பஞ்சாயத்தாக்கி, விஜய் டி.வி. கோபிநாத்திடம் அஜித் பில்லா ரிலீஸான சமயத்தில் கொடுத்த பேட்டியின்போது ‘எனக்கு தமிழ் சரியாக பேச வராது! இங்கிலீஸ் கலந்து பேசுவேன்! இதையெல்லாம் விமர்சனம் பண்றாங்க.’ என்று சொன்னதையும் கோர்த்துவிட்டு சகட்டுமேனிக்கு விமர்சனம் பண்ணுகிறது அந்த கூட்டம். 

*    அசுரன் அசுரத்தனமாக ஹிட்டடித்து, எனை நோக்கி பாயும் தோட்டா செம்ம  ஃபெயிலடித்து இதோ இப்போது பட்டாஸ் படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது தனுஷுக்கு. தர்பார் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்று நினைத்தார் தனுஷ். ஆனால் தர்பார் படம் பற்றிய ரிவியூ மற்றும் வசூல் டல்லாக இருப்பதால், பொங்கலுக்கு மறுநாள் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்து களமிறங்கிவிட்டனர். 

அப்படின்னா மாமனார் படம் டல்லடிச்சதால மருமகன் ஹேப்பியா களமிறங்கிட்டார்னு சொல்லலாமா?

-    விஷ்ணுப்ரியா