42 ஆண்டு கால ரகசியத்தை போட்டுடைத்த பாக்யராஜ்..! கஞ்சா அடித்துவிட்டு கிர்ர்னு ஏறி வாய்விட்டு சிரித்தாராம்..! 

நானே நிறைய கஞ்சா அடித்து உள்ளேன் என “கோலா“ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேசி இருந்த நிகழ்வு அனைவர் மத்தியில் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், இயக்குனர் பாக்யராஜ், படக்குழுவிவினர் கலந்துக்கொண்டனர்.

அப்போது கஞ்சா பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கடுமையாக விமர்சனம் செய்து பேசி  இருந்தார். அதாவது, "கஞ்சா அடிப்பவர்கள் கழுத்தை அறுக்க வேண்டும்.. அரேபிய நாடுகளில் உள்ளவாறு கடுமையான சட்டத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.. சமீபத்தில் எப்படி ஹெல்மெட் கட்டாயம் என தமிழக அரசு கொண்டுவந்து அமல்படுத்துகிறதோ.. அதே போன்று கஞ்சா விஷயத்திலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.மேலும் கஞ்சா அடிப்பதால், ஒரு நபர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த குடும்பமே எப்படி பாதிக்கிறது என்பதை உணர வேண்டும்... என பேசினார்.

பின்னர் பேச வந்த இயக்குநர் பாக்யராஜ், "கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய அடித்து இருக்கிறேன். கோயம்பத்தூரில் இருக்கும் போது சுமார் 42 வருடங்களுக்கு முன் சிகரெட்டில் கலந்து கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லாவேவேலை செய்யும். ஒரு நாள் அப்படித்தான்கஞ்சா அடித்த போது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். 

அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது.. புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்" என தெரிவித்து உள்ளார்.