கொரோனா ஆபத்து..! ஏ.சி பயன்படுத்தினால் வைரஸ் பரவுமா ?

உலகில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறதே தவிர கட்டுக்குள் அடங்கவில்லை என்றே சொல்லலாம்.

உதாரணத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ்,இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அங்கு தொடர்ந்து கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றது என்ற ஒரு நிலையில், தமிழகத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் உயிரிழப்புகள் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சற்று குறைவாகத்தான் உள்ளது.

வெப்ப நிலை காரணமா? 

இதற்கெல்லாம் காரணம் இந்தியாவில் வெப்பநிலை அதிகமாக இருக்கிறது என்றும், அதிலும் கோடைகாலம் என்பதால் அதிக வெப்பநிலை நிலவும். இதன் காரணமாக எந்த ஒரு வைரஸும் மக்களை அண்டாது. வேகமாகவும் பரவாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 

அதே வேளையில் தற்போது கோடைகாலம் என்பதால் ஏசி பயன்பாடு அதிகமாக உள்ளது. குளிர்ச்சியான இடங்களில் வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பது ஒரு பொதுவான கருத்து. எனவே  கொரோனா ஒரு பக்கம் பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில் நம் வீட்டில் ஏசி பயன்படுத்தினாலும் கொரோனா  பரவும் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

அதாவது கொரோனா பாதித்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு ஏசி அறையில் வீட்டில் இருந்தார் என்றால் அதே அறையில் மற்றவர்கள் இருக்கும் போது மிக எளிதாக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது தவிர ஏசி பயன்படுத்தினால் தொற்று ஏற்பட்டு விடும் என்பது உறுதி செய்ய செய்யாத ஒன்று

ஒருசிலருக்கு ஏசி பயன்படுத்தினாலே மிக எளிதாக காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணம்... குளிர்ச்சியான காற்று, வீட்டிற்குள்ளேயே சுழற்சி முறையில் கிருமி கலந்த காற்று,மேலும் குளிர்ச்சியான காற்று நம் உடலில்  படுவதால் மிக எளிதாக ஜலதோஷம் பிடிக்கிறது.

இதுபோன்ற ஒரு சாதாரண அடிப்படை விஷயங்களைக் கொண்டு, ஏசி அறையில் இருக்கும் போது மிக எளிதாக பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.