கண்கலங்க வைக்கும் வீடியோ..! வீட்டு பாடம் செய்ய சிறுவன் செய்யும் வேலையை பாருங்க...!

தன் வீட்டில் இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்பதால் வீட்டு பாடத்தை முடிக்க மிகுந்த சிரமப்பட்டு சிறுவன் ஷாப்பிங் மாலில் உள்ள கடையில் அனுமதிபெற்று இன்டர்நெட் பயன்படுத்தி வீட்டு பாடத்தை முடிக்கும் ஓர் காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரேசிலில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள கடையில் பள்ளி சிறுவன் ஒருவன் அங்கிருந்த டேப்லட்டை பயன்படுத்தி வீட்டுப்பாடம் செய்கிறான். கடைகாரரிடம் முறையான அனுமதி பெற்று தினமும் இவ்வாறு வீட்டுப்பாடம் செய்து முடித்தவுடன் வீட்டிற்கு செல்கிறான். சிறுவனின் நிலையை அறிந்து கடைக்காரரும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.

 

இவ்வாறு சென்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் யாரோ ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் சிறுவன் இந்த அளவிற்கு கஷ்டப்பட்டு எப்படியும் வீட்டுப் பாடம்  முடிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருப்பதால் எப்படியும் மேன்மேலும் வாழ்க்கையில் உயர்வான் என்ற நம்பிக்கையில் கடைக்காரரும் அவருக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன்வைத்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.