ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் ஒரிசாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான விஜயவாடாவில் இருந்து ஒரு பார்சல் முத்துக்குமாருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து இந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. முத்துக்குமாருக்கு இந்த பார்சல் கிடைத்தவுடன் ஆர்வமாக திறந்து பார்த்து உள்ளார். அதன்பின் ஒவ்வொன்றாக வீட்டு உபயோகப் பொருட்களை பாக்ஸில் இருந்து எடுத்து வெளியே வைத்து உள்ளார். பின்னர் கடைசியாக திடீரென நான்கு அடி நீளமுள்ள ஒரு விஷப் பாம்பு அதிலிருந்து விழுந்துள்ளது.

பின்னர் அதைக் கண்டு அதிர்ச்சியான முத்துக்குமார் பதற்றத்தில் வெளியே ஓடி உள்ளார். பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த விஷப் பாம்புவை  சிறிது நேர போராட்டத்திற்கு பின் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

எப்படி பார்சல் பாக்சில் பாம்பு வரமுடியும்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பார்சல் அனுப்பப்பட்ட நிறுவனத்திடமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.