கொரோனா வைரஸ் எதிரொலி..! மதுரையில் ரெடியானது தனி வார்டு..! பதற்றமாகும் மக்கள்..! 

உலக மக்கள் மத்தியில் தற்போது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தினமும் பல தகவல் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது சீனாவில் ஹுவாங் நகரில் முதன் முதலாக தென்பட்ட கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பரவலாக ஆங்காங்கே பரவி இதுவரை 1500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு குறைந்தது 10 முதல் 12 நாட்கள் வரை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனாவில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு சென்ற ஒரு சிலரால் அங்கும் ஒரு சிலருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தென்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகபல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி இருக்கும் தருவாயில் தற்போது மும்பையில் கஸ்தூரிபா மருத்துவமனையில் 8 பேருக்கு கரோனா அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில் ஆறு பேருக்கு தாக்குதல் இல்லை என சோதனை மூலம் கண்டறியப்பட்டது. மீதமுள்ள இரண்டு பேரை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இப்படி ஒரு தருணத்தில் கேரளாவிலும் சுமார் 80 பேர் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர். இப்படி ஒரு தருணத்தில் தமிழகத்தில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவர்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் படி, 8 படுக்கை அறைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு, 8 மருத்துவர்கள் மற்றும் 20 செவிலியர்கள் கொண்டு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை அனுமதித்து ரத்தப்பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கவும், வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை   அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.