திருப்பதி எழுமலையான் கோவிலை பற்றி அடுத்தடுத்த சர்ச்சை வந்துக்கொண்டே இருக்கிறது. இது பற்றி மற்றவர்கள் சொன்னால் கூட, நம்ப முடியாமல் இருக்கலாம் ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு அவர்களே இது பற்றி கூறுகிறார்...

இது குறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரமண தீத்சிதலு பல்வேறு கேள்விகளுக்கு அதிரடி விளக்கம் அளித்து உள்ளார்.

கண்ணதாசன் மீது அதீத காதல் கொண்டவர் .....

தமிழில் மிக அழகாக பேசும் ரமண தீட்சித்தலு ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார். அதற்கான காரணம் அவர் கண்ணதாசன் மீது கொண்டு இருந்த அளவற்ற அன்பு தானாம்.. அவருக்காகவே தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டாராம்.

விஐபிக்கள் வந்தால் ஏழுமலையானுக்கு அவசர அவசரமாக பூஜை செய்ய வேண்டும்...!

திருப்பதிக்கு விஐபி க்கள் வந்தால் போதும், கடவுளுக்கு கூட பூஜைகள் வேகமாக செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதிகாரிகள் இடும் கட்டளைக்கு அர்ச்சகர்  அடி பணிந்து ஆக வேண்டும்...

விஐபி க்கள் வந்தால் எல்லோருக்குமே தரிசனம் கிடைக்கும்.. அதாவது ஏழுமலையான்  தரிசனம் அல்ல ...விஐபிக்கள் தரிசனம் ....

அதிகாரிகளுக்கும் ஒரு சில ஊழியர்களுக்கும் விஐபிக்களிடமிருந்து கவனிப்பு பலமாக  இருப்பதால் தான், உடனே ஏழுமலையானை வழிபட வழிவகை செய்வார்கள்.....சாதாரண மக்கள் நிலை..?

சாதாரண மக்கள் 1 நொடி கூட நின்று ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாது. அவ்வாறு ஏழை மக்கள் நின்று வழிபடும் அளவிற்கு நேரம் கொடுத்தால் அதனால் என்ன பயன் உண்டு ..? இதுவே விஐபிக்கள் என்றால் காசு கிடைக்கிறது அல்லவா ...?

இதை எல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம் ...ஆனால் மன வேதனையும் வருத்தமும் தான் மிஞ்சும் என மிகவும் வருத்தத்துடனும் வேதனையுடனும் கூறி உள்ளார் ரமண தீட்சித்

யார் அந்த விஐபிக்கள் என்ற கேள்விக்கு .....

யாரெல்லாம் அதிக பணம் கொடுக்க தயாராகா உள்ளார்களோ அவர்கள் தான் விஐபிக்கள்  என தெரிவித்து உள்ளார் ரமண தீட்சித்

அதிகம் பணம் கொடுத்தால் அவர்கள் தான் விஐபிக்கள்... பணம், பதவி, புகழ், அதிகாரம் மட்டும் இருந்தால் போதும், அவர்கள் நேராக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துக் கொள்ளலாம்.

தங்க ஆபரணங்கள் பற்றி கேட்டபோது....

ஆபரணங்களை கொடுக்க முன் வரும் தனவந்தவர்களிடம் , பெருமாளுக்கு இது வேண்டும் அது வேண்டும் என்பார்கள்....அவர்களும் சரி நாங்கள் கொண்டு வருகிறோம் என சொன்னால்...பெருமாளுக்கு எது போன்ற நகை வேண்டும்... எந்த அளவில் வேண்டும் என்பது முழுதும்  நாங்கள் சொல்லும்  ஜூவல்லர்ஸ்களிடம் கொடுங்கள் .. அவர்கள் தான் சரியாக செய்வார்கள்.. அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எது சரியாக இருக்கும் ...எத்தனை கிலோ நகை வேண்டும் என்று”....இவ்வாறு தெரிவிக்கும் போது, அங்கேயே ஊழல் நடக்கிறது என்பதை தெளிவாக புரித்துக்கொள்ள முடியும்...

ஏனென்றால் இவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருக்கும்...அதனால் தான் கடந்த 9 ஆண்டுகளாகவே அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரும் அங்கேயே பணி புரிந்து  வருகிறார்.

ஒரு சில ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னும் அங்கேயே மீண்டும் எக்ஸ்டென்ஷன் என்ற பெயரில் அங்கேயே இது போன்ற வேலை செய்து வருகிறார்கள்

இதனால் தான் நான் சிபிஐ விசாரணை வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறேன் என  தெரிவித்து உள்ளார் ரமண தீட்சித்

நகை விவரம்...!

1974 ஆம் ஆண்டு முதல் அர்ச்சகராக இருக்கும் நான், என்னுடைய  அனுபவத்தின் படி 1996 ஆம் ஆண்டே – 500 கிலோ தங்க நகைகள் இருந்தது ...இன்றைய நிலவரப்படி1000 கிலோ தங்கத்தையும் தாண்டி இருக்கும்

மைசூர் மகாராஜா கொடுத்த நெக்லஸ்....

மைசூர் மகாராஜா கொடுத்த நெக்லசில் ரோஜா நிறம் வைரம் இருந்தது. 2001 இல்,பக்தர் ஒருவர் வீசிய நாணயத்தால் வைரம் உடைந்துவிட்டதாக  ரெக்கார்ட் செய்து உள்ளனர். பின்னர் அது காணாமால் போய்விட்டது

அதற்கு பின், 2011 – ஜெனிவாவில் ஒரு வைரம் மிக பெரிய தொகைக்கு ஏலம் போனது....அந்த வைரம் கோல்கொண்டா வைர சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது என அதில் குறித்து வைக்கப்படிருந்தது. இந்த வைரம் நவாப்களிடமிருந்து திப்பு சுல்தான் மூலம் மைசூர் மகாராஜா விற்குவந்ததாக நாங்கள் படித்து உள்ளோம்.

இந்த வைரத்தை தான் மைசூர் மாகாராஜா திருப்பதி ஏழுமலையானுக்கு பரிசாக கொடுத்து இருந்தார். அந்த வைரம் தான் இப்போது காணாமல் போய்விட்டது....அந்த வைரமும் ஜெனிவாவில் ஏலம் விடப்பட்ட  வைரமும் ஒத்துப்போவதால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறேன் என ரமண தீட்சித் தெரிவித்து உள்ளார்

9 வருடமாக ஒரே இடத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருப்பது எப்படி..?

9 வருடமாக ஒரே ஒரு அதிகாரி மற்றும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒரே இடத்தில் இருப்பது எப்படி சாத்தியம்..?

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருக்கும் போது....இதே போன்று நடைபெறுவது வழக்கமாக வைத்து உள்ளனர் என்பதை தெளிவாக புரித்துக் கொள்ள முடியும்...ஏனென்றால் இவர்கள் மூலம் தான் எல்லா ஊழலும் நடைபெறுகிறது என்று போட்டு உடைத்தார் ரமண  தீட்சித்.

பிரசாத அடுப்புக்கு அடியில் புதையல்...ரகசியத்தை போட்டு உடைத்த தலைமை அரச்சகர் ரமண தீட்சதலு

திருப்தியில் இரண்டு பிரகாரங்கள் உள்ளது

உள் பிரகாரம் – அன்ன பிரசாதம் செய்யும் இடம். சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் (பெருமாளுக்கு )

வெளி பிரகாரம் – லட்டு வட தோசை அப்பம் செய்யும் இடம் 

உள்பிரகாரம் டிசம்பர் 8 மூடப்பட்டது – இது எனக்கே தெரியாது....அப்போதும் பிரதான அரச்சகர் நான் தான்..எனக்கு கூட தெரியாமல் பிரகாரம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக வேறு இடத்தில் பிரகாரம் கட்டப்பட்டது. இது ஆகம சாத்திரம் படி ஒத்துவராது

ஏற்கனவே இருந்த பிரகாரம் 1015 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே  கட்டப்பட்டது. அதாவது 1000 வருடத்தையும் தாண்டி விட்டது..இந்நிலையில் இந்த பிரகாரத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை....

மூடிய பின்னர்  சில நாட்கள் கழித்து, அந்த இடத்தில் உடைக்கப்பட்டு இருந்தது. அப்போது தான் எனக்கு சந்தேகம் வலுக்க தொடங்கியது

அடுப்புக்கு அடியில் புதையல்

புக் – சவால் ஜவாப் பட்டி என்ற புத்தகமானது,  நார்த் ஆற்காடு பிரிட்டிஷ்  கலக்டர் ஒருவரால்  மேற்கொள்ளப்பட்ட திருப்பதி எழுமலையான் ஆராய்ச்சி பற்றிய முழு விவரம் அடங்கியது

1800 ஆம் வருடம் திருமலை கோவிலை பற்றி ஆரய்ச்சி மேற்கொண்ட இவர் அனைத்து விவரத்தையும் எழுதியுள்ளார்.

அதில் சோழ மற்றும் பல்லவ மன்னர்களும் பிரதாப்ருத்ரர் பேரரசரால் வழங்கப்பட்ட தங்க காசுகள் தங்க நகைகள், வைடூரியங்கள் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக பக்தர்கள் காலடி படாத இடமாக பார்த்து பிரகாரம் அடியில் வைக்கப்பட்டு இருந்ததாக எழுதப்பட்டு உள்ளது

100 க்கு 50 அடி

இந்த நகைகளை பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடம் தான் உள்பிரகாரம். இதனை தான் சமீபத்தில் மூடப்பட்டது.

பின்னர் அந்த இடத்தில் உடைக்கப்பட்டும் உள்ளது. இதனை பார்த்தபின் எனக்கு மிகவும் சந்தேகம் வலுத்துள்ளது. இது தொடர்பாக  கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும் என தலைமை அர்ச்சகர் ரமண தீத்சித்தலு தெரிவித்து உள்ளார்.