அச்சு அசலாக ஆணின் பாலின உறுப்பு போன்றே "மீன் வகை"..! கடற்கரையில் ஒதுங்கியதால் மக்கள் அதிர்ச்சி ..! 

கலிபோர்னியா கடற்கரையில் பார்ப்பதற்கு ஆண் பாலியல் உறுப்பு போன்றே வடிவம் கொண்ட மீன்கள் கரை ஒதுங்கியதால் இதனை பார்க்கும் மக்கள் ஆச்சரியத்துடன் அவர்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் 10 அங்குல அகலம் கொண்டதாகவும் காணப்படுகிறது. அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ளது drake's கடற்கரை இந்த கடற்கரையில் பலவிதமான மீன்கள் தென்படுவது வழக்கம். இப்படி ஒரு தருணத்தில் சமீபத்தில் ஆண் உறுப்பு போன்ற வடிவம் கொண்ட மீன் வகை கரை ஒதுங்கி உள்ளது.

இந்த வகை உயிரினங்கள் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் காணப்படுவது உண்டு. மணலில் புதைந்து காணப்படும் இந்த அரிய வகை மீன்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். இந்த உயிரினங்கள் சாதாரணமாக 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையே  தோன்றியதாகவும் கருதப்படுகிறது.

பலவிதமான மீன்கள்,சுறா, நண்டு என பல கடல்வாழ் உயிரினங்களை எளிதாக பார்க்க முடியும். ஆனால் இந்த மீன்களை பற்றி விமர்சனம் செய்யும் தென்கொரியா மக்கள் இதனை ஆண்குறி போன்றே உள்ளதால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலா பரவி வருகிறது.