இந்த தாய் என்ன செய்கிறார் பாருங்கள்..! இது எல்லோருக்கும் ஒரு பாடம்..! இனியாவது  திருந்துவோமா ..? 

"தலைக்கவசம் உயிர்கவசம்" என்ற பழமொழி பல வருடங்களாக கேட்டுக்கொண்டு இருந்தாலும்  இன்றளவும் மக்கள் முழுமையாக தலைக்கவசம் அணிந்து தான் செல்கிறீர்களா ? என்றால் இல்லை என்ற பதில் தான் நம் கண் முன்னே வந்து நிற்கிறது.

அதிலும் சமீபத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், கடுமையான அபராத தொகை விதிக்கப்பட்டாலும், விதிகளை மீறி பாதுகாப்பு கவசம் அணியாமல் சென்றாலோ... அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படி இருந்தும் அத்தனையும் மீறி ஹெல்மெட அணியாமல் சென்று, போக்குவரத்து போலிசாரிடம் பிடிபட்டால் கெஞ்சி கூத்தாடி எப்படியும்  கிளம்பி விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்கின்றனர். 

அதுவும் குறிப்பாக சென்னையில் மட்டும் மோட்டர் வாகன விதிகள் கடுமையாக  பின்பற்றப்பட்டு வரும் நிலையில்...ஒரு பெண்மணி தன் குழந்தையை மிகவும் பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்கிறார். தன் பின்னால் அமர்ந்து உள்ள மகளுக்கு  ஹெல்மெட் போட்டும், பாதுகாப்பாக பெல்ட் அணிந்தும் பள்ளிக்கு அழைத்து செல்கிறார்.

ஒரு தாயின் அன்பு எந்த அளவிற்கு பாதுகாப்பு என்ற முறையில் குழந்தைக்கு செலுத்தப்படுகிறது என்பதை இந்த புகைப்படம் ஒன்றே நமக்கு உணர்த்தும். இத்தனைக்கும் இந்த பெண்மணிக்கு குழந்தையை இப்படிதான்பாதுகாப்பாக அழைத்து  செல்ல வேண்டும் என யாரும் கட்டளை போடவில்லை. இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட அந்த தாயின் பாதுகாப்பான ஓர் பயணம் அனைவருக்கும்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது.