புற்றுநோயால் 2 கைகளை இழந்த காதலி..! கைவிடாத காதலன்..."அவள் தான் என் மனைவி"..! வைரலாகும்  திருமண புகைப்படம்...! 

இங்கிலாந்தில் ஈடன் பிரிட்ஜ் பகுதியில் வசித்து வரும் லின்ச் என்ற 21 வயதான இளம் பெண்ணுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் உடல்முழுக்க ஆங்காங்கு புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கவே இவரின் இடதுகையை எடுக்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

பிறகு ஒரு கையுடன் தனது வாழ்க்கையை நம்பிக்கையுடன் நகர்த்தி வந்த ஷாஷனை 18 வயதுடைய ஆஸ்லி லின்ச் சென்ற ஆண்டு சந்தித்தார். இவர்கள் இருவரும் நன்கு பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் அந்த பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ஷாஷனுக்கு புற்றுநோய் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அவருடைய வாழ்நாள் காலம் எத்தனை நாட்கள் என குறிப்பிட முடியாது என்ற அளவுக்கு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒரு நிலையில் அவரது காதலன் எப்படியும் ஷாஷனை  திருமணம் செய்து கொண்டு, இருக்கும் காலம் வரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கீமோதெரபி சிகிச்சை பெற்றுக் கொண்டு வரும் அவருக்கு தலையில் முடி எல்லாம் கொட்டி போனது. இந்த ஒரு நிலையில் எப்படி இருந்தாலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய மனம் புண்படாதபடி திருமணம் செய்து கொண்டுள்ளார் உண்மை காதலன். இவருடைய திருமண புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.