வெறும் 2 ரூபாய்க்காக ஓர் உயிரே பலி ..!  எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் நாம்..? 

ஆந்திர மாநிலத்தில் சைக்கிளுக்கு காற்று அடிக்க ரூபாய் 2 வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா என்ற பகுதி அருகே உள்ளது வலசபகாலா. இந்த பகுதியில் சாய் என்ற நபர் சைக்கிள் கடை நடத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு 25 வயது மதிக்கத்தக்க சூரிய சுவர்ணராஜு என்பவர் சைக்கிளுக்கு காற்று அடிக்க வந்துள்ளார். பிறகு கடைக்காரர் காற்று அடிக்க இரண்டு ரூபாய் கேட்டதற்கு தன்னிடம் சில்லறை இல்லை என கூறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார். ஆனால் கடைக்காரர் உடனடியாக இரண்டு ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.

பிறகு இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் அடிக்கும் அளவிற்கு சென்றுள்ளனர். அப்போது கடைக்காரருக்கு சாதகமாக உதவ முன்வந்த கடை ஊழியர் அப்பாராவ் என்பவர் அருகில் இருந்த ஓர் இரும்பு கம்பியை எடுத்து சூரிய ராஜுவை தாக்கியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த ராஜுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான அப்பாராவை போலீசார் தேடி வருகின்றனர். வெறும் ரூபாய் 2 காக இப்படி ஒரு சண்டை ஏற்பட்டு ஒரு உயிரையும் மாய்த்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோமா? என்ற  சிந்தனையும் மேலோங்கிகிறது.