ஒரிஜினல் கணவரை விட கள்ளக்காதலுக்கு "ஓவர் பொசசிவ்"..! யார் கூடவோ ஒரு போன் பேசினத்துக்கு கொலை செய்து வெறிச்செயல்...!    

தன்னுடைய கள்ளக்காதலி வேறு ஒரு நபருடன் போனில் பேசியதற்கு ஒரிஜினல் கணவரை விட அதிக ஆத்திரப்பட்டு கள்ளக்காதலியை கழுத்து நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருமனூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி திருமங்கை வயது 33. திருமங்கை தன்னுடைய சித்தி மற்றும் சித்தி மகளை வழி அனுப்ப வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அமராவதி ஆற்றங்கரையோரம் திருமங்கையின் சடலம் மிதந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி ரமேசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தன்னுடைய சித்தி மற்றும் சித்தி மகளை வழி அனுப்ப சென்றார்... அதன்பின் இவ்வாறு பார்க்க நேரிட்டது என புலம்பி உள்ளார். பின்னர் திருமங்கையின் செல்போன் எண்ணை டிராக் செய்து பார்த்ததில் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசிக்கும் தனபால் என்ற நபருடன் பேசியது தெரிய வந்துள்ளது. பின்னர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகே ஜேசிபி ஓட்டிவந்த தனபால், அங்கே திருமங்கை சிற்றுண்டி கடை வைத்திருந்த தருணத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், வயதை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இருந்தபோதிலும் திருமணத்திற்குப் பின்னும் அவர்களுடைய கள்ளக்காதல் வளர்ந்து இருந்தது என்றும், இதற்கிடையில் வேறு யாரோ ஒரு நபருடன் தொலைபேசியில் திருமங்கை பேசி வந்ததாகவும், அதனால் வீட்டிற்கு அழைத்து அதுகுறித்து பேசி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கோபத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னுடைய நண்பனின் வாகனத்தை எடுத்துக்கொண்டு அதில் திருமங்கையின் உடலை எடுத்துச் சென்று அமராவதி ஆற்றங்கரையில் வீசியதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார். பின்னர் தனபாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.