மார்போடு கட்டி அணைத்த பிஞ்சுக்குழந்தை...! வெயில்.. மழை.. சிக்னல்..! இரு சக்கர  வாகனத்தில் வீடு வீடாய் சென்று டெலிவரி செய்யும் தாய்...! 

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளது. பெண்கள் செய்யும் சாதனைகளும் மிக மிக அதிகமே இன்னும் சொல்லப்போனால்.... ஆண்களைக் காட்டிலும் அனைத்து விதங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம் தான்.

இந்த நிலையில் வீடு வீடாக சென்று உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள்,பெண்களையும் வேலைக்கு அமர்த்துகிறது. அந்தவகையில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப கஷ்டம் காரணமாக கைக் குழந்தையையும் பெல்ட் மூலம் தன்னோடு இணைத்து, டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய செல்கிறார்.

இந்த ஒரு காட்சியை ஒரு வழியாக சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட தற்போது இது குறித்த பேச்சு அடிபடுகிறது. சென்னையில் இது போன்று பல பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனாலும்கூட கைக்குழந்தையை சுமந்தவாறு வீடு வீடாக சென்று உணவு டெலிவரி செய்யும் இந்த பெண்ணின் உழைப்பை பார்த்து பாராட்டுவதா அல்லது ஒருசில பெண்கள் படும் பெரும்பாட்டை இந்த சமுதாயம் வெறுமனே பார்த்து ரசித்துக்கொண்டு உள்ளதா என பல கேள்விகள் நம்முள் பிறக்கும்.

 

ஏன் இதனைப் பார்க்கும் நாமும் அவரவர் மனதில் ஏற்படும் கருத்துக்களை பதிவிட்டு சென்றுவிடலாம். ஆனால் யார் அவருக்கு உதவி செய்வார்கள்? இதற்கு என்னதான் தீர்வு? குடும்ப கஷ்டம் என்பதால் பெற்றவர்கள் கடின உழைப்பை மேற்கொண்டாலும் கூட அவர்களுடன் பிஞ்சு குழந்தையும்... இப்போதிலிருந்தே இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிட வேண்டுமா? பதில் கிடைக்குமா? பொருத்திருந்து பார்க்கலாம்.