நம் வாழ்கையில் பல கஷ்டங்கள் வரலாம். அதற்காக வாழ்க்கை முழுவதுமே கடினமாக கஷ்டப்படும் நிலை உருவானால் என்ன செய்வது...

நம் மனம் எங்கு செல்லும்...? எங்காவது கோவில் குலத்திற்கு சென்று வரலாமே..அப்படியாவது நாம் துன்பத்திலிருந்து விடுபட முடியுமா என்று பலரும் கோவில்களுக்கு சென்று சில வேண்டுதலை வைப்பார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நம் வீட்டில் நாம் என்ன செய்தால் நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும் என்பதை இப்போது பார்க்கலாம்.

விளக்கு ஏற்றுவது

பூஜை ரூமில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும்

இதே போன்று வாசலில் இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும்...நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம்.

அது எப்படி நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது என நினைக்கிறீர்களா..?

அதாவது காட்டு நெல்லிக்காய் உள்ளது அல்லவா..? அதனை வாங்கி மேற்புரமாக சற்று பள்ளமாக தோண்டி, அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள்.

பின்னர் காட்டன் கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுவது நல்லது.

இதே போன்று சாதாரண நாட்கள் என்றால் எண்ணெய் விளக்கு ஏற்றுவது நல்லது. மற்ற விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.