Asianet News TamilAsianet News Tamil

வெற்றிக் கதைகள்! - மருத்துவராகிய பின்னரும் விவசாயத்தை மறக்காத மருத்துவர்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டத்திலிருந்து முதல் முஸ்லீம் மருத்துவரான டாக்டர் ஷேக் யூனஸ், மருத்துவராகிய பின்னரும், தனக்கு வாழ்வளித்த தந்தையின் தொழிலை மறவாமல் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
 

A first Muslim doctor from Jalna, he still tends to homegrown cotton crop
Author
First Published Mar 22, 2023, 2:29 PM IST

மாகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தின் குக்கிராமத்திலிருந்து முதல் மருத்துவராகியிருக்கும் டாக்டர் ஷேக் யூனஸ், தான் கடந்த வந்த பாதையை அவரே கூறுகிறார்.

கிராமத்து பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்து இன்று மருத்துவர் ஆகியிருக்கிறேன் என்றால் அது ஒன்று சிறிய சாதனை அல்ல, என் கல்விக்காகவும், என் வாழ்க்கைக்காவும் என் தந்தை அவர் உடலையும் வருத்தி, உயிரையும் தந்துள்ளார். என் தந்தை குத்புதீன் மற்றும் சகோதரன் அஸ்லாம் ஆகியோரின் பருத்தி விவயாசம் மூலம் கிடைத்த பணத்தில் நான் மருத்துவம் பயின்றேன். நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது என் உறவினர்கள் அனைவரும் மற்ற குழந்தைகளைப் போல் என்னையும் மதரஸாவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர், ஆனால், நானோ வழக்கமான பள்ளியில் படிக்க விரும்பினேன். என் விருப்பத்திற்கு மதிப்பளித்து என் தந்தையும் என்னை பள்ளிக்கு அனுப்பினார்.

பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, தன் உறவினர்கள் தங்கள் குழந்தைகளுடன் மதரஸாவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் ஷேக் வழக்கமான பள்ளியில் படிக்க விரும்பினார், அவருடைய தந்தை அவரது விருப்பத்திற்கு மதிப்பளித்தார். அவர் எப்போதும் அறிவியல் பாடத்தில் ஈர்க்கப்பட்டார் மற்றும் அவர் பத்தாம் வகுப்பில் இருந்தபோது தனது வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

என் வாழ்வில் மிக இட்கட்டான கட்டம் என்றால், அப்போது நான் பள்ளிப் படிப்பை முடித்திருந்தேன், என் தந்தை ஒரு சாதாரண பருத்தி விவசாயி, எனு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 4 பேர், இரு சகோதரிகள் ஒரு சகோதரன். 2008ம் ஆண்டு என் தந்தையின் மொத்த ஆண்டு வருமாணம் ரூ.30 ஆயிரம் தான். அந்த வருமானத்தின் மூலம் என் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு பயிற்சி கட்டணமாக ரூ.12,000 செலுத்துவது மிக கடினமாக இருந்தது.

A first Muslim doctor from Jalna, he still tends to homegrown cotton crop

பின்னர், மருத்து கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு 50,000 ரூபாய் செலவாகும். ஆதற்காக என் தந்தை ரூ.30,000 வங்கியில் கடன் பெற்று என்னை படிக்க வைத்தார். நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஆறு வருட எம்பிபிஎஸ் படிப்புக்காக ஆண்டுக்கு 25,000 சிறுபான்மையினரின் உதவித்தொகையை கிடைத்தாலும், எனது வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 எனது தந்தையைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

என் போராட்டத்தை விட என் தந்தையின் போராட்டம் மிகப் பெரியது மட்டுமல்ல.. மிக கொடியதும் கூட. என் படிப்பு, என் சகோதரிகள் மற்றும் சகோதரனின் திருமணம், குடும்ப சுமைகள் என அனைத்தையும் சமாளிக்க வேண்டி இருந்தது. குடும்பத்தின் மீது எனக்கு பாசம் அதிகம் என்றாலும் அவர்களை காண மாதம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 16 மணிநேரம் நீண்ட பயணம் செய்து குடும்பத்தினரை சந்திப்பேன்.

எனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்த கையோடு, மருத்துவ பயிற்சி காலத்தின் போது 6000 ரூபாய் சம்பளம் பெற்றேன். எம்பிபிஎஸ் படிப்பைத்தொடர்ந்து, எம்.டி., மேற்படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்றேன். அதில், நாட்டிலேயே 104வது இடத்தை பிடித்தேன். மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்.டி., படிப்புக்கு 26 இடங்கள் மட்டுமே இருந்தது. புனேவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வழியாக எம்.டி., படிப்பை முடித்தேன்.

DM (Doctorate in Medicine)க்கான போட்டி இன்னும் கடினமானது. ஒவ்வொரு ஆண்டும் இருதய மருத்துவத்தில் டி.எம்.க்கு விண்ணப்பிக்கும் 3,000 மாணவர்களில், பத்தில் ஒரு பங்கினர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். KGMU நாடு தழுவிய தேர்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் எட்டு மாணவர்களை மட்டுமே சேர்க்கிறது. KGMU-இல் இதய மருத்துவத்தில் DM க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மருத்துவர்களில் நானும் ஒருவன்.

ஒருவரால் ஒதுக்கப்பட்டு.. இன்று பலருக்கு வாழ்வளிக்கும் அஃப்சனா!

என் தந்தை 62 வயதாகும் போது சளித் தொல்லையால் காலமானார். நிமோனியா நோய், அப்பிரிவில் தான் நான் படித்து மருத்துவரும் ஆகியிருக்கிறேன். ஆனால், என்னால் என் தந்தையை காப்பாற்ற முடியவில்லை என நினைக்கையில் என்னால் என்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த வருத்தம் என் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

பிப்ரவரி 2022-ல், நான் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவியல் மருத்துவர் மஹ்ஜாபினை திருமணம் செய்துகொண்டேன். பரேலியில் நடைபெற்ற என் திருமணத்திற்காக முதன்முதலாக அவர்களுடன் ஜல்னாவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் சென்றேன். டெல்லி, மற்றும் உத்தரபிரதேசத்தை என்னுடன் என் குடும்பத்தினரும் ரசித்தனர். அவர்களை அனைவரும் ஊரை தாண்டி வெளியே வருவது இதுவே முதல் முறை.

சிறந்த மருத்துவர், திருமணம் என அனைத்து விதத்திலும் பூரணமடைந்த டாக்டர் யூனஸ், இப்போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது கிராமத்தில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios