வேனிலேயே உலகம் சுற்றும் பிரான்ஸ் தம்பதிகள்..! தற்போது ராமேஸ்வரத்தில்..!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 11, Jan 2019, 8:15 PM IST
a couple roaming all over world by van
Highlights

பிரான்ஸ் நாட்டிலிருந்து இரண்டு தம்பதிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என திட்டம் போட்டு அதற்காக சிறப்பு சொகுசு வேனை ஏற்பாடு செய்து, அதில் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

வேனிலேயே உலகம் சுற்றும் பிரான்ஸ் தம்பதிகள்..! 

பிரான்ஸ் நாட்டிலிருந்து இரண்டு தம்பதிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என திட்டம் போட்டு அதற்காக சிறப்பு சொகுசு வேனை ஏற்பாடு செய்து, அதில் பயணம் மேற்கொண்டு  உள்ளனர்.

ஜெரால்ட் ஜெஸ்ஸி மற்றும் கியா,பியனி என்ற வயதான தம்பதிகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் பயணத்தை தொடங்கி உள்ளனர்.இந்த பயணம், தற்போது தமிழ்நாடு ராமேஸ்வரம் வரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்சிலிருந்து புறப்பட்டவர்கள் இத்தாலி துருக்கி ரஷ்யா பாகிஸ்தான் ஈரான் நாடுகள் வழியாக இந்திய வந்தனர். இந்தியாவில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்துள்ளனர்.

அங்கு கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று ரசித்தவண்ணம் இருந்துள்ளனர். இதுவரை 15 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் மேற்கொண்டுள்ள அவர்கள் இன்னும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

வித்தியாசமாக ஒரு சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்த தம்பதிகளை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுற்றுலா மேற்கொள்ள இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசு வேனை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

loader