பிச்சை எடுத்து வங்கியில் "டெபாசிட்"...!  இப்போது 6 கோடிக்கு சொந்தக்காரி.! 

லெபனான் நாட்டில் ஓர் தனியார் மருத்துவமனையின் முன்பு உட்கார்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தான் பிச்சை எடுத்த பணத்தை ஜெடிபி வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ள ஹஜ் பாவா முகமது அவத் என்பவர் இன்று கோடீஸ்வரி ஆன சுவாரசிய பதிவை இப்பொது பார்க்கலாம்.

லெபனான் நாட்டில் உள்ளது சீதோன் நகரம்.இங்கு உள்ள ஓர் மருத்துவமனையின் வாசலில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை ஜேடிபி வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ளார்.இந்தநிலையில் இந்த வங்கி மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்தது. பின்னர் இந்த வங்கி மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஓர் தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு அந்த நாட்டு ரிசர்வ் வங்கி டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது. 

அப்போது முகமது அவர்களுக்கு 3.3 பில்லியன் லெபனான் பவுண்டுகள் காசோலையாக வழங்கப்பட்டது. அதாவது இந்திய ரூபாயில் சொல்ல வேண்டுமென்றால் 6 கோடியே 37 லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரர் இவர். இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கும் போது, "கடந்த 10 ஆண்டுகளாகவே இவர் இங்கு தான் பிச்சை எடுத்து வருகிறார். சாதாரணமாக இருப்பார். ஆனால் பிச்சை எடுத்து இவ்வாறு வங்கியில் டெபாசிட் செய்து இருப்பார் என்று நினைக்கவில்லை...  மேலும் இத்தனை நாள் பிச்சைக்காரியாக பிச்சை எடுத்து வந்தவர் இன்று கோட்டீஸ்வரராக பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது என நிகழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, இதுகுறித்த கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர் பொதுமக்கள்.