கொரோனாவால் குணமடைந்தாலும் "பிரச்சனை"!  91 பேருக்கு மீண்டும் தாக்கியது கொரோனா..!

கொரோனா பாதித்தவர்களில் ஒரு பக்கம் கொத்து கொத்தாக மடிந்தாலும் இன்னொரு பக்கம் நோய் எதிர்ப்பு தன்மை அதிகமாக இருப்பவர்களில் பலரும் குணமடைந்து வீடு திருப்பி இருப்பது ஒரு பக்கம் ஆறுதல் தரும் செய்தியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் குணமடைந்தவர்களுக்கு கூட மீண்டும் கொரோனா தொற்றுவது  பெரும் பீதியை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி மக்களுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. அதன் படி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இந்த ஒரு நிலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில் 10,450 பேருக்கு கொரோனா இருக்கிறது. அவர்களில் 208 பேர் உயிரிழந்து விட்டனர். 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர் 

குணமடைந்து இருக்கும் செய்தியை கேட்கும் போது சற்று ஆறுதலாக இருந்தாலும், இவர்களில் மீண்டும் 91 பேருக்கு கொரோனா மீண்டும் தாக்கி இருப்பதாக தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

முழுமையாக குணமடைந்து இருப்பவர்களுக்கு மீண்டும் எப்படி நோய் தோற்று ஏற்பட்டிரும் என ஆராய்ச்சி செய்ய உள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கும் போது நோய் தொற்றின் போது உடலில் எச்சம் இருந்த கிருமியால் மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என தெரிவித்து உள்ளனர் 

உலக நாடுகளை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் சற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையிலும், கட்டுப்பாடு இல்லாமல் மக்கள் வெளியில் சுற்றவது பெரும் ஆபத்தானது என்பதனை விரைவில் புரிந்துகொள்ளும் நேரம் வரும் என கருதப்படுகிறது.