நாட்டில் பரவி வரும் மர்ம காய்ச்சல்களால் அவ்வப்போது மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில்  பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், குரங்கு காய்ச்சல், ஜிகா வைரஸ் ஆகியவற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018ல் 14,992 பேருக்கு பன்றி கைவிகள் ஏற்பட்டதாகவும், அதில் 1,103 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 64 பேர் உயிரிழந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக பல ஊர்களிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 64 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் ரத்த மாதிரிகள் போபாலில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அங்கு நடைபெற்ற சோதனையில் 39 பேர் பன்றிக் காய்ச்சலாலும் 350 டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துளளது. ஆனாலும் 64 பேர் பலியாக காரணமான வைரஸ் எந்த வகையைச் சேர்ந்தது என்பது கண்டறியப்படவில்லை. அந்த மாநிலத்தில் மேலும் 39 பேருக்கு மர்ம காய்ச்சல் உள்ளது என்றும் இன்னும் 16 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.