வெறும் 631 கிராம் எடையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை......!!

ஐக்கிய அரபு எமிரேட்டில், தாயின் வயிற்றில் இருந்து 26.5 வாரங்களில் அதிசய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதாவது 631 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை அதிசயக் குழந்தை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, தாயின் கர்ப்பப்பைக்குள் இருந்த நீர் குறைந்து குறை மாதத்தில் இந்தக்குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்த தாய், சேய் இருவரையும் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர் என்பதை நினைத்தால் மெய் சிலிர்க்க வைக்கிறது.

இதுகுறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ''உயர் ரத்த அழுத்தத்துடன் வந்த தாயையும், சேயையும்காப்பாற்ற வேண்டியது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தை , Neonatal unit- ல் குழந்தை வைக்கப்பட்டுள்ளது . அதுமட்டும் இல்லாமல் , 2,050 எடையுடன் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தக் குழந்தையை அதிசயக் குழந்தை என்று மருத்துவமனை வாட்டாரம் அழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது......!!!