பட்டை, கிராம்பு, கசா கசா இருந்தால் போதும்- உங்களுடைய செல்வம் பன்மடங்கு பெருகும்..!!
நமது இந்திய சமையல் முறைகளில் வாசனைப் பொருட்ளான பட்டை, இலவங்கம், கிராம், கசா கசா உள்ளிட்டவற்றுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. நமது உடல் ஆரோக்கியத்துக்கும், மனநலன் சார்ந்த தேவைகளுக்கும் அவை உறுதுணையாக உள்ளன. ஒருசில சமயங்களில் அது தெய்வீக அம்சம் பெற்றும் விளங்குகிறது. ஆம், நீங்கள் படித்த செய்தி உண்மை தான். வாசனைப் பொருட்களையும் மூலிகைகளையும் வாஸ்து சாஸ்திரத்தின் மூலம் பணத்தைப் பெருக்கும் பொருளாக மாற்றலாம். அதற்கான வழிகளை தெரிந்துகொள்வோம்.
கரம் மசாலா
வாஸ்து படி அதிக செல்வத்தை ஈர்க்க இந்த மசாலாவை ஒரு சிறிய பாக்கெட்டாக உருவாக்கி பணப்பையில் வைக்கவும். உங்கள் வீடு அல்லது கடையின் மூலைகளில் கரம் மசாலாவை தூவினால் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த மசாலா வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் கொண்டு வருகிறது. உங்கள் உணவில் சுவை சேர்க்க நீங்கள் அதைப் பயன்படுத்தும்போது, உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை சேர்க்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
பட்டை
உங்களுடைய பணப் பையில் அல்லது உண்டியலில், இலவங்கப்பட்டையை வைத்திருப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். இலவங்கப்பட்டைக்கு குணப்படுத்துதல், அன்பு, வெற்றி மற்றும் பாதுகாப்பு உணர்வுகளை கொண்டு வரும் சக்தி உண்டு. இதை உங்களுடைய செயல்பாடுகளில் பயன்படுத்தும் போது, ஆன்மீக அதிர்வு ஏற்படுகிறது. அதன் விளைவாக பல்வேறு நல்ல காரியங்கள் மற்றும் செல்வம் சேரும் ஆற்றல் உருவாகிறது.
கிராம்பு
உங்களுடைய பணத்துக்கு மதிப்பு சேர்க்க வேண்டுமானால், கிராம்பை ஒரு காகிதத்தில் மடித்து பணப்பையில் வைக்கலாம். கிராம்பு மூலம் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை அதிர்வுகள் அழிக்கப்படுகின்றன மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்மையும் நமது செல்வத்தையும் பாதுக்காக்கும் சிறந்த மசாலா பொருளாக கிராம்பு உள்ளது.
இஞ்சி
நீங்கள் எந்த உணவுப் பொருளுடன் இஞ்சியை கலந்து சாப்பிட்டாலும், அதனுடன் செல்வத்தையும் சேர்த்துக் கொள்கிறீர்கள் என்ற் பொருள். நமது வாழ்க்கைக்கு இஞ்சி வெற்றிகளை கொண்டுவந்து சேர்க்கிறது. இதன்மூலம் அன்பு, ஆரோக்கியம் மற்றும் அதிகரிக்க உடலில் அதிகரிக்கிறது. இஞ்சியை உணவுப் பொருளாகவோ அல்லது வாசனை பொருளாகவோ அல்லது உடல்நலனை காக்கும் பொருளாகவோ என்று எப்படியும் பயன்படுத்தலாம்.
குளிர்காலம் துவங்கிவிட்டால் குதிகால் வெடிப்பு பிரச்னையும் பின்னாடியே வந்துவிடும்- என்ன செய்யலாம்..??
புதினா
புதினாவை பணத்தில் தடவினால், பணம் பல்வேறு எண்ணிக்கையில் பெரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதனால் எப்போது உங்களுடைய பணப்பை அல்லது காசோலை கொண்ட புத்தகங்களில் புதினாவை போட்டுவைப்பது நல்லது. அதன்மூலம் கிடைக்கும் வாசனை ஆற்றலை தக்கவைக்கிறது. மேலும் உங்களுடைய முதலீடு வெற்றிகரமாகவும் பாதுகாக்கவும் இருக்க வழிவகை செய்கிறது.
நீரிழிவு பிரச்னையால் பறிபோகும் பார்வை- தடுப்பதற்கான 4 வழிமுறைகள்..!!
கசா கசா
முந்தைய காலங்களில் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக, கசா கசாவை தங்களுடைய பணப்பையில் முன்னோர்கள் போட்டு வைத்திருந்தனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், தங்களுக்கு கிடைக்கும் பணத்தை கசா கசா டப்பாக்களில் போட்டு வைத்திருந்தனர். இதன்மூலம் அவர்களுடைய செல்வம் பெருகி வந்தது. நவீன காலத்தில் இந்த பழக்கம் மாறிவிட்டது. பொதுவாகவே வாசனைப் பொருட்கள் கொண்ட டப்பாக்களில் காசு போட்டு வைத்தால், செல்வம் சேரும் என்று நம்பிக்கை பலரிடம் உள்ளது.