கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் 'கோவிட் சுரக்சா திட் டத்தை' செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட கடந்த மார்ச் 28-ம் தேதி பி.எம். கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. இந்த நிதி மூலம் நாடு முழுவதும் பல்வேறு கரோனா தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் 'கோவிட் சுரக்சா திட்டம்' என்கிற புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக் காக 'கோவிட் சுரக்சா திட் டத்தை" செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் குறைந்தபட்சம் 6 தடுப்பூசிகளை சந்தையில் விரைவாக அறிமுகம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தோராயமாக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கரோனா தடுப் பூசி விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 12 முதல் 15 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தராளமாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.